
ஸ்ரீ கலியுக சிதம்பரர் திருக்கோயிலில் கி.பி.15 ஆம் நூற்றாண்டிலிருந்து பல்வேறு சமூக மக்கள் அவர்களது குல தெய்வங்களை திருக்கோயில் வளாகத்தின் வெளியே பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினர். சந்தையூர் ஜமீனால் புனரமைப்பு வேலைகள் நடைபெற்ற பொழுது திருக்கோயிலைச் சுற்றி இருந்த குல தேவதைகளுக்கும் தனிச் சன்னதிகள் ஏற்படுத்தப்பட்டன. பெரியாச்சி அம்மன் மற்றும் கருப்பசாமி ஆகிய தெய்வங்கள் அனைத்து சமூகத்தினருக்கும் குல தெய்வங்களாக இருப்பதால் வழிபாட்டின் பொழுது சாதி ரீதியான கருத்து வேறுபாடுகள் வராமல் தடுக்க பெரியாச்சி அம்மனை மட்டும் சுத்தமுக தெய்வமாக திருக்கோயில் வளாகத்தினுள் கிழக்கு நோக்கியபடி பிரதிஷ்டை செய்தனர். கருப்பசாமிக்கான வழிபாடு அனைவருக்கும் ஒரே விதமாக இருப்பதால் திருக்கோயில் வளாகத்திற்கு வெளியே பிரதிஷ்டை செய்தனர். மாசி உற்சவ விழாவில் 21 பரிவார தெய்வங்களும் 61 சேனைகளும் (21 பந்தி 61 சேனை) வழிபடப்படுகின்றனர்.
21 பரிவார தெய்வங்களின் பட்டியல் :-
1. கழுவநாதன்
2. விருமாண்டி (ஸ்ரீ பிரம்மன்)
3. மாயன் (ஸ்ரீ மஹா விஷ்ணு)
4. காத்தவராயன் (கழுமரம்)
5. அக்னி வீரபத்திரன்
6. லாட சன்னாசி
7. மதுரை வீரன்
8. வெள்ளையம்மாள்
9. பொம்மியம்மாள்
10. இருளன்
11. இருளாயி அம்மன்
12. பெரியாச்சி அம்மன் (பேச்சியம்மன்)
13. இராக்காயி அம்மன்
14. கருப்பாயி அம்மன்
15. வாங்கருப்பன்
16. பூங்கருப்பன்
17. மதுரை பெருங்கருப்பன்
18. சங்கிலி கருப்பன்
19. ஆகாய கருப்பன்
20. சந்தன கருப்பன்
21. சமய கருப்பன்
சாதி அடிப்படையில் தொகுக்கப்பட்ட குல தெய்வங்கள் பின்வரும் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
வ.எண் சமூகப் பெயர் (சாதி) குல தெய்வங்கள்
******* **************************** *********************************************************
1 சோழிய செட்டியார் பெரியாச்சி அம்மன், காத்தவராயன், கருப்பசாமி
2 இராஜ கம்பள நாயக்கர்
மற்றும்
தொட்டிய நாயக்கர் (அல்லி குலம்) பெரியாச்சி அம்மன், மதுரை வீரன், வெள்ளையம்மாள், பொம்மியம்மாள்
3 பிரமலைக் கள்ளர் கழுவநாதன், விருமாண்டி, மாயன், பேச்சியம்மன்
4 விஸ்வகர்மா (ஆசாரியார்) காத்தவராயன்
**C. விஸ்வநாதன்
பெருந்தெய்வங்களின் பட்டியல் :-
-
ஸ்ரீ கலியுக சிதம்பரேஸ்வரர் | ஸ்ரீ நந்திகேஸ்வரர் (அதிகார நந்தி)
-
ஸ்ரீ சிவகாமி அம்பாள்
-
ஸ்ரீ கன்னி மூலை கணபதி | நாக கன்னியர் மற்றும் அவ்வை பிராட்டி
-
ஸ்ரீ சுப்ரமணிய சமேதரர்
-
ஸ்ரீ மஹா விஷ்ணு | ஸ்ரீ கருடாழ்வார் மற்றும் ஸ்ரீ ஜெயவீர ஆஞ்சநேயர்
-
ஸ்ரீ நாக தேவதையர் சமேத நாகராஜா
-
ஸ்ரீ ஜெய வீராசன தக்ஷிணாமூர்த்தி
-
ஸ்ரீ பிரம்மன் | அன்ன வாஹனம்
-
ஸ்ரீ விஷ்ணு துர்கா தேவி
-
ஸ்ரீ சண்டிகேஸ்வரர்
-
சப்த கன்னியர்
-
ஸ்ரீ கால பைரவர்
-
நவகிரக மூர்த்திகள்
-
சித்தி விநாயகர்
-
சங்கநிதி மற்றும் பத்மநிதி
-
ஸ்ரீ விநாயகர்
-
ஸ்ரீ ஸ்கந்தன்